காலத்துக்கு ஏற்ப பயறுச் செய் என்பதுப் போல். இப்பொழுது நாம் வாங்கக்கூடிய ஸ்மார்ட் போன் விலை அதிகம் உள்ளதாக இருப்பதால் அதை பாதுகாப்பது மிக முக்கிய ஒன்றாக உள்ளது.
எனவே, அதற்கு உறுதியான போன் கேஸ் அல்லது உறுதியான கவர் போடுவது மட்டுமல்லாமல் டச் ஸ்கிரீனை பாதுகாக்க டெம்பர்டு கொரில்லா கிளாஸ் போடுகின்றனர். இது போனக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இதில் டெம்பர்டு கிளாஸ் முக்கிய காரணியாக இருக்கிறது. இது போன்னின் முன் பகுதியை அதாவுது டச் ஸ்கிரீன் உடையாமல் இந்த கிளாஸ் பாதுகாப்பாக வைக்கிறது.
ஆகையால், இந்த டெம்பர்டு கிளாஸ் போன்ற ஸ்மார்ட்போன் பாகங்கள் இப்போது மிகவும் பிரபலமாகவும், வர்த்தகம் வாய்ப்பு மிக்க துறையாக விட்டன.
இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிப்பு தொழிலைத் தொடங்க ரூ.2.5 முதல் ரூ.3 லட்சம் போதும். இந்தத் தொழிலில் மாதம் ரூ.3 முதல் ரூ.4 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
சிலிக்கானில் தயாரிக்கப்பட்ட இந்த டெம்பர்டு கிளாசில் கூடுதல் பாதுகாப்பாக ஒரு பசை லேயரும் உள்ளது. இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிப்பில் இந்த பசை லேயர் முக்கிய பங்கையாற்றுகிறது.
டெம்பர்டு கிளாஸ் தயாரிப்புத் தொழிலை உலகின் எந்த மூலையிலும் தொடங்கலாம். எங்கும் விற்கலாம். வெளிநாடுகளுக்கும் தரமான கிளாஸ்களை ஏற்றுமதி செய்யலாம். இதற்காக மெனக்கெட்டு ஒரு கடை அல்லது அலுவலகம் திறக்கத் தேவையில்லை.
டெம்பர்டு கிளாஸ் அதன் கடினத்தன்மைக்காக பல்வேறு பயன்பாடுகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. மொபைல் டெம்பர்டு கிளாஸ் தொழிலை தொடங்குவது மிகவும் எளிதானது. வீட்டிலிருந்தே டெம்பர்டு கிளாஸ் உற்பத்தி தொழிலை செய்யலாம். ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் பல கெமிக்கல் பிராசஸ் மூலம் இந்த டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படுகிறது.
டெம்பர்டு கிளாஸ் உடைந்தால் அது சிறுசிறு துகள்களாக பிரியும். சாதாரண கண்ணாடி உடைந்தால் கூர்மையான செதில்களாக பிளக்கும். ஆனால் டெம்பர்டு கிளாஸ் பாதுகாப்பானது. கண்ணாடி இயற்கையிலேயே உடையும் தன்மையுடையது. ஆனால் அதன் கடினத்தன்மையை அதிகரிப்பதற்காக டெம்பர்டு கிளாஸ்கள் சிறப்பான முறைகளில் தயாரிக்கப்படுகின்றன.
மிக அதிக வெப்ப நிலையில் டெம்பர்டு கிளாஸ் தயாரிக்கப்படுவதால் சாதாரண கண்ணாடிகளை விட பன்மடங்கு வலுவானது. இந்த டெம்பர்டு கிளாஸ் வலுப்படுத்தப்பட்டதும் சூடு மற்றும் அதிர்வைத் தாங்கக் கூடியதாக மாறிவிடும். சாதாரண கண்ணாடியை விட நான்கைந்து மடங்கு பலமானது.
ஆகையால், பல சந்தை வாய்ப்பு மிக்க இந்த தொழிலைத் தொடங்கி பல வேலை வாய்ப்பை ஏற்பத்தி நாமும் பல லட்சம்
வரை சம்பாதிக்கலாம்.
வாழ்த்துக்கள்.

Comments
Post a Comment